நான் எதிர்க்கட்சி அல்ல : சபையில் பகிரங்கமாக அறிவித்தார் ரணில்

ஆசிரியர் - Admin
நான் எதிர்க்கட்சி அல்ல : சபையில் பகிரங்கமாக அறிவித்தார் ரணில்

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளை செவிடுத்து, அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குழுவை உடனடியாக அறிவிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

என்னால், எதிர்க்கட்சிக்காக பேச முடியாது. நான் எதிர்க்கட்சியல்ல. அத்துடன் நான் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் குழுவிலும் அங்கம் வகிக்கவில்லை எனவும் ரணில் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்து வருவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, தனக்கு பாதிப்பு ஏற்பட்டது என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதற்கான குழுவை நியமித்து, கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். என்னால், எனக்காக மட்டுமே பேச முடியும். வேறு எவரும் இல்லை. நாங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவில்லை என்றால், பேச்சுவார்த்தை நடக்காது.

அடுத்த சில தினங்களுக்கேனும் எதிர்க்கட்சியினரை வரவழைக்க வேண்டியே செய்ய வேண்டிய காரியமாகும். இதனால், சம்பந்தப்பட்ட குழுவை நியமியுங்கள். அதன் பின்னர் நாம் நமது வேலைகளை செய்வோம். கோரிக்கை நிறைவேற்றிக்கொடுங்கள். இறுதி மூன்று நாட்களில் நாங்கள் முழுமையான கலந்துரையாடல்களை முன்னெடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.  

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு