SuperTopAds

நான் அப்படி பட்ட பெண் இல்லை!! -மனம் திறக்கும் சோனியா அகர்வால்-

ஆசிரியர் - Editor II
நான் அப்படி பட்ட பெண் இல்லை!! -மனம் திறக்கும் சோனியா அகர்வால்-

பல படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்துள்ள போதும் இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண் என்று சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.

சோனியா அகர்வால் இப்போது ‘கிராண்ட்மா' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகை அவர் பேசியதாவது:-

இந்த படத்தில் நான் ஆசிரியையாக நடித்திருக்கிறேன். பல படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்து உள்ளேன். இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண். நேரில் பார்த்தால் அப்படி தெரியாது.

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு காரில் தனியாகவே பயணம் செய்திருக்கிறேன். காரை நானே ஓட்டுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன். நான் பாடசாலையில் படிக்கும்போது என்னைக் கேலி செய்த ஒரு மாணவனை கன்னத்தில் அறைந்து நான் துணிச்சலான பெண் என்பதை நிரூபித்தேன் என்றார்.