கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்த கமல்!!
கமல் ஹாசன் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளபோதிலும், 3 ஆம் திகதிவரைக்கும் தனிமைப்படுத்தப்படுவார் என்று வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை தரப்பில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா பாதிப்பில் இருந்து கமல் ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 3 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதியில் இருந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள கமல் தயாராகிவிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.