பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம்!! -ரசிகர்களை கோரும் அஜித்-

ஆசிரியர் - Editor II
பட்ட பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம்!! -ரசிகர்களை கோரும் அஜித்-

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உள்ள அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இவரை ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தல அஜித் என்று அழைத்து வருகிறார்கள். 

இந்நிலையில் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்றுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு