வடக்கில் ஒரு மாவட்டத்தில் 29 எயிட்ஸ் நோயாளர்கள்..! இந்த வருடமும் ஒருவர் உயிரிழப்பு..
வவுனியா மாவட்டத்தில் கடந்த 18 வருடங்களில் 29 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இள வயதினரே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் மருத்துவ அதிகாரி கு.சந்திரகுமார் தொிவித்தார்.
எயிட்ஸ் நோய் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு நேற்று கருத்து தொிவித்தபோது அவர் மேலும் தொிவித்துள்ளதாவது,
வவுனியா மாவட்டத்தில் 2003ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டின் காலாண்டுவரை 29 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு நோயாளி மட்டும் இனங்காணப்பட்டுள்ளார்.
29 நோயாளிகளில் 16 ஆண்களாவர். இவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாடு சென்று விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவர் இவ்வருடம்
வவுனியாவில் உயிரிழந்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.