SuperTopAds

தலைச்சுற்று மற்றும் வாந்தி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தையின் தாய் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
தலைச்சுற்று மற்றும் வாந்தி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தையின் தாய் உயிரிழப்பு..!

கடுமையான தலைச்சுற்று மற்றும் வாந்தி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி - உதயநகரை சேர்ந்த 19 வயதான 2 மாத குழுந்தையின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கடந்த 18ம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 22ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். 

எனினும் சிகிச்சை பலனின்றி 27ம் திகதி உயிரிழந்துள்ளார்.