அமித் சாத்துக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
அமித் சாத்துக்கு கொரோனா!!

பாலிவுட் நடிகர் அமித் சாத்  தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

கடும் முன்னெச்சரிக்கைகள் இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அறிகுறிகள் லேசானவை. நெறிமுறைகளைப் பின்பற்றி, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன் மற்றும் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பேன். இதிலிருந்து நான் வலுவாகவும் சிறப்பாகவும் மீண்டு வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு