SuperTopAds

உணவகத்தில் நின்றவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி! மாஸ்க் போடாதது காரணமாம், பளை நகரில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
உணவகத்தில் நின்றவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி! மாஸ்க் போடாதது காரணமாம், பளை நகரில் சம்பவம்..

கிளிநொச்சி - பளை நகரில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரினால் உணவகத்திலிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மாலை உணவுக்காக சிலர் உணவகத்திற்குள் வந்திருந்த வேளை திடீரென வந்த பளை பொலிஸ் பொறுப்பதிகாரி அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதில் உணவகத்தில் பணிபுரிவோர் மீதும் தாக்கியுள்ளார். இதன்போது பளை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் அங்கிருந்தவர்கள் ஏன் எங்களை தாக்குகிறீர்கள் என்று கேட்டபோது முகக்கவசம் இல்லாததால் தாக்கியதாக கூறியுள்ளார்.

ஆனால் அங்கிருந்த ஊழியர் ஒருவர் முகக்கவசம் அணிந்திருந்தும் அவர் தாக்கப்பட்டுள்ளார். உணவகத்தினுள் உணவு உண்ண வந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய விடயமானது கண்டிக்கதக்க விடயமாகும் எனவும், 

தம் மீது வீணாக தாக்குதல் நடாத்திய பளை பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.