திடீர் சுகயீனமடைந்த 12 வயதான சிறுமி..! வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி, ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
திடீர் சுகயீனமடைந்த 12 வயதான சிறுமி..! வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி, ஒருவர் கைது..

ஓமந்தை - குஞ்சுக்குளம் கிராமத்தில் 12 வயதான பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியைசேர்ந்த குறித்த மாணவிக்கு நேற்றையதினம் திடீர் சுகவீனம் ஏற்ப்பட்ட நிலையில் வவவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இதன்போது குறித்த மாணவி நான்குமாதங்கள் கர்ப்பம் தரித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

மாணவியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மாதர்பனிக்கர் குளம் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 

32 வயது குடும்பஸ்தரை கைதுசெய்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த மாணவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Radio