இன்று மகிழ்ச்சியாக கொண்டாடவேண்டிய நாள்..! நீதிமன்ற வாயிலில் கேக் கொடுத்து கொண்டாடிய சிவாஜிலிங்கம்..
இன்று மகிழ்ச்சியான நாள் என கூறி நீதிமன்ற வாசலில் கேக் கொடுத்து கொண்டாடுமாறு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்த மகிழ்ந்தார். இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும்,
அதனை சந்தோசமாக கொண்டாடுமாறும் அவர் தெரிவித்து இவ்வாறு கேக்கினை அங்கு தரித்திருந்தவர்களிற்கு பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.