சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட கடற்றொழில்சார் அமைப்புக்கள் கலந்துரையாடல்!

ஆசிரியர் - Admin
சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட கடற்றொழில்சார் அமைப்புக்கள் கலந்துரையாடல்!

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்தல், உள்ளூர் இழுவை வலை படகுகளின் செயற்பாடுகளை வரையறுத்தல், இந்தியக் கடற்றொழிலாளர்களினால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத தொழில் முறையினை நிரந்தரமாகத் தடுத்தல், கடற்றொழில்சார்  இறங்கு துறைகளை முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் கரையோரப்  பாதுகாப்பு திணைக்களத்தின் செயற்பாடுகளை செழுமைப்படுத்த வேண்டியதன் அவசியம் உட்பட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட கடற்றொழில்சார் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா ஆகியோருக்கு  இடையில் மாளிகாவத்தை கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு