ஜெய்பீம் பட விவகாரம்!! -சூர்யா, ஜோதிகா மீது வழக்கு-

ஆசிரியர் - Editor II
ஜெய்பீம் பட விவகாரம்!! -சூர்யா, ஜோதிகா மீது வழக்கு-

த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, ஜோதிகா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்த படத்திற்கு பா.ம.க. தரப்பில் எதிர்ப்பு எழும்பியது. இப் ஜெய்பீம் படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக பா.ம.க. தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வன்னியர் சங்கத்தின் குறியீடான அக்னி குண்டத்தையும் காடுவெட்டி குருவை தவறாக சித்தரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா, தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தை வெளியிட்ட ஓடிடி தளம் மீதும் வழக்கு தொடரபட்டது.


Radio