வாட்ஸ்ஆப் பயன்பாட்டில் முதலிடத்தை பிடித்த நாடு எது தெரியுமா
நாடுமுழுவதும் தற்சமயம் பேஸ்புக்கை விட வாட்ஸ்ஆப் பயன்பாட்டை அதிகளவு மக்கள் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக நமது தினசரி வேலைகளுக்கு அதிகமாக பயன்படுகிறது இந்த வாட்ஸ்ஆப் செயலி. மேலும் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த செயலி. வாட்ஸ்ஆப் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப்பில் சேர்க்கும் வண்ணம் உள்ளது. விரைவில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது காம்ஸ்கேர் என்ற நிறுவனம் உலகளவில் வாட்ஸ்ஆப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது, மேலும் ஆய்வு அறிக்கை கூறியது என்னவென்றால், சர்தேச அளவில் வாட்ஸ்ஆப் பயன்பாட்டில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
89சதவீதம்:
இந்தியாவில் சுமார் 89சதவீத மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாகும், பின்பு 11 சதவீத மக்கள் கணனியில் பயன்படுத்துவதாகும் அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்தியதால் முதல் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.
இரண்டாவது இடம்:
அடுத்து வாட்ஸ்ஆப் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு இந்தோனிஷியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 87சதவீதம் மக்கள் அங்கு வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து அர்ஜெண்டினா, மலேசியா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் வாட்ஸ்ஆப் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2017-ஆம் ஆண்டு:
கடந்த 2017-ம் ஆண்டு இந்தியர்கள் 98 சதவீதம் ஸ்மார்ட்போன் வாட்ஸ்ஆப் செயலி மூலமாகவும், பின்பு 2சதவீதம் மக்கள் பேஸ்புக் மெசஞ்சர் மூலமாகவும் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்மிஸ் அஸ் அட்மின்:
வாட்ஸ்ஆப்பின் ஐஓஎஸ் 2.18.41 வெர்ஷன் மற்றும் ஆண்ட்ராய்டின் 2.18.116 வெர்ஷனில் ஒரு புதிய அம்சம் காணப்பட்டுள்ளது. ‘டிஸ்மிஸ் அஸ் அட்மின்’ என்கிற பெயரை கொண்டுள்ள அந்த அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பில் உள்ள சக அட்மினை டிஸ்மிஸ் செய்யும் உரிமையை அட்மின்களுக்கு வழங்கும்.
வெறுமனே டாப் செய்தால் போதும்:
இந்த அம்சத்தின் பிரதான நோக்கமே – சக அட்மின்களை நீக்குவதற்கான வழிமுறையை எளிமை ஆக்குவதே ஆகும். நேற்றுவரை ஒரு மெம்பரை, அட்மின் பதவியை நீக்க வேண்டும் எனில், அவரை க்ரூப்பை விட்டு ரிமூவ் செய்து பின்னர் மீண்டும் ஆட் செய்ய வேண்டியதாக இருக்கும். இனி அந்த நீளமான செயலமுறைக்கு அவசியம் இருக்காது. வெறுமனே ‘டிஸ்மிஸ் அஸ் அட்மின்’ அம்சத்தினை டாப் செய்தால் போதும்.