பிரபாகரனையே நான் பழிவாங்க நினைத்ததில்லை..! டக்ளஸ் கூறுகிறார்..
என்னை கொல்வதற்குப் பல தடவைகள் முயற்சி செய்த பிரபாகரனையே நான் பழிவாங்க நினைத்ததில்லை. அவனது மரணத்தில் பரிதாபமே, எற்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவிவ்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அழிவுகள், இழப்புக்கள், இடம்பெயர்வுகள் எமக்கு வந்திருக்காது. மேலும் பல மடங்கு முன்னேற்றகரமான வாழ்க்கையில் நாங்கள் இருந்திருப்போம். கெடுகுடி சொற்கேளாது என்பது போல அது அப்படியே போய்விட்டது.
என்னிடம் பழிவாங்கும் நடவடிக்கைகள் இல்லை. நான் பிரபாகரனையே பழிவாங்கவில்லை. என்னை எத்தனையோ தடவை கொலை செய்ய முற்பட்டவன். என்னுடன் இருந்தவர்களை கொன்றவன். என்னுடன். இருந்தவர்களை காயப்படுத்தியதுடன், துரத்தியவன். கடத்தியவன்.
அவனது இறப்பில் எனக்கு பரிதாபம் ஏற்பட்டது என்றார்.