மாவீரர் குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்துகிறதா இராணுவம்?
மாவீரர் நாள் நெருங்கும் நிலையில் மாவீரர் குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று இராணுவத்தினர் விபரங்களை சேகரிப்பதாகவும், இது அச்சுறுத்தும் செயற்பாடு எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஊடகப்பிரிவினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேலேயே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நேற்று திருநகர் பகுதியிலும் அதை அண்டிய பகுதியிலும் இவ்வாறான செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.