SuperTopAds

நிறைபோதையில் வீதியால் சென்றவர்கள் மீது தாக்குதல்! ஆசிரியர் ஒருவர் படுகாயம், தொடரும் அட்டூழியம், பொலிஸார் உறக்கம்..

ஆசிரியர் - Editor I
நிறைபோதையில் வீதியால் சென்றவர்கள் மீது தாக்குதல்! ஆசிரியர் ஒருவர் படுகாயம், தொடரும் அட்டூழியம், பொலிஸார் உறக்கம்..

நிறைபோதையில் நின்ற ரவுடிகள் நடத்திய தாக்குதலில் வீதியால் சென்ற ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணிக்கு பின்னர் சுமார் ஒரு மணிநேரமாக குறித்த இளைஞர் குழு அவ் வீதியால் பயணிப்பவர்களை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டதுடன், 

வீதியின் குறுக்கே தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர். 

அத்துடன் அவர்களது தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அருகில் உள்ள வீடுகளில் வசித்தோர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர் குழுவினர் அப்பாதையூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் காயமடைந்த நிலையில் பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி ஆசிரியர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா வைரவர் கோவில் வீதி, கதிரேசு வீதி, மன்னார் வீதி ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக 

இளைஞர் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்து செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.