ஈரானின் மகளிர் அணியின் கோல்கீப்பராக ஆண்!! -குற்றம் சாட்டிய ஜோர்தான்-
ஈரானின் மகளிர் அணியின் சார்பில் ஆண் ஒருவர் கோல்கீப்பராக விளையாடினார் என்று அந்த அணியை எதிர்த்து விளையாடிய ஜோர்தான் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
குறித்த போட்டி கடந்த செப்டம்பர் 25 ம் திகதி உஸ்பெக்கிஸ்தானில் நடந்தது. இவர் இரண்டு பெனால்டிகளை காப்பாற்றியதன் மூலம் ஈரான் ஆசிய கிண்ணணத்திற்கு தகுதி பெறுவதற்கு காரணமாக விளங்கினார்.
அவர் பெண்ணா என்பது குறித்து பரிசோதனை இடம்பெறுவது அவசியம் என ஜோர்தானின் கால்பந்தாட்ட அமைப்பின் தலைவர் இளவரசர் அலி பின் அல் ஹ_சைன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும் மேற்படி குற்றச்சாட்டை ஈரான் தெரிவுக்குழுவின் தலைவரும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.