சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக போராட்டம்!
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்றும் முயற்சியில் நேற்றுக்கலை மாபெரும் போராட்டம் இடம்பெற்றது. திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்டக் குழு மற்றும் தமிழ்அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட்திணைக்களமே வரலாற்றை திரிபுபடுத்தாதே, அதிகார இனவெறியை தமிழர்கள்மீது காட்டாதே, சிங்கள குடியேற்றத்தை நிறுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
இதேவேளை ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் நிமித்தம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, பிரதேசசபை தலைவர்களான ச.தணிகாசலம், யோகராசா, நகரசபை தலைவர் இ.கௌதமன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசகட்சியின் முன்னாள் உறுப்பினர் நி. ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ம.தியாகராஜா உட்பட அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.