புனித் ராஜ்குமாரின் முன்னுதாரண செயல்!! -15 நாட்களில் 6 ஆயிரம் பேர் கண் தானம்!!

ஆசிரியர் - Editor II
புனித் ராஜ்குமாரின் முன்னுதாரண செயல்!! -15 நாட்களில் 6 ஆயிரம் பேர் கண் தானம்!!

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்தார். அவர் உயிரிழந்தலும் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.

புனித் ராஜ்குமார் கண் தானம் செய்ததால், அவரது ரசிகர்களும் கண்தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று தங்களது கண்களை தானம் செய்வதாக கூறி பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி அவர் உயிரிழந்த பின் 15 நாட்களில் மட்டும் கர்நாடக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கண்களை தானம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு நாராயண நேத்ராலயா வைத்தியசாலையில் மட்டும் 15 நாட்களில் 78 பேர் தங்களது கண்களை தானம் செய்துள்ளார்கள். அந்த வைத்தியசாலையில் ஒரு மாதத்திற்கு 100ற்க்கும் குறைவானவர்களே சராசரியாக கண் தானம் செய்துவந்துள்ளனர்.