ஹர்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்!! -மும்பை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அதிரடி-

ஆசிரியர் - Editor II
ஹர்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் பறிமுதல்!! -மும்பை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அதிரடி-

இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். 

அங்கு வந்த அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதன் போது அவரின் கையில் ஒரு கைக்கடிகாரமும், கைப்பையில் மற்றுமொரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது.

இவை இரண்டும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு 5 கோடி என்றும் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, குறித்த இரு கைக்கடிகாரங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த இரண்டு கைக்கடிகாரங்களும் துபாயில் இருந்து வாங்கிய பட்சத்தில், அவற்றிற்கான ரசீது எதுவும் அவரிடம் இல்லை என்பதால், அவரின் மீது சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.