SuperTopAds

18 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வேண்டும்..! தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கப்போகும் அரச ஊழியர்கள்..

ஆசிரியர் - Editor I
18 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வேண்டும்..! தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கப்போகும் அரச ஊழியர்கள்..

அரசாங்க ஊழியர்களுக்கு 18 ஆயிரம் ரூபாயினால் சம்பளம் அதிகரிக்கவேண்டும். இல்லையேல் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவேண்டும். இந்த கோரிக்கைக்கு இரு வாரங்களுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும். 

இல்லையேல் முன் அறிவித்தலற்ற தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை அரசாங்க உத்தியோகபூர்வ தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றது. 

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2022ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். 18,000 ஆயிரம் சம்பள அதிகரிப்பு அல்லது மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவேண்டும். 

வழங்காவிட்டால் முன்னவித்தலின்றிய தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவோம். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாத காரணத்தினால் 1.5 மில்லியன் அரச சேவையாளர்களும், 

அவர்களை சார்ந்துள்ள 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 4 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தின் ஒருமாத செலவு 58,000 ஆயிரமாகவுள்ளது. 

மறுபுறம் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து எதிர்வரும் இரு வாரத்திற்குள் கவனம் செலுத்தாவிடின் முன்னறிவித்தலற்ற, தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படுவோம்.