15 நட்களுக்கான எரிபொருளே கையிருப்பில் உள்ளதாம்! எரிபொருள் தட்டுப்பாடு வருவதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன..
மசகு எண்ணை தட்டுப்பாட்டினால் சபுஸ்கந்த எண்ணை சுத்தீகரிப்பு நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் எழுந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனால் எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாய நிலை காணப்படுவதாக அந்த தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
மசகு எண்ணையை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எடுக்காமை காரணமாகவே இந்ந்நிலை ஏற்பட்டது.
என பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் மசகு எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விநியோகத்தர்களின் பிரச்சினை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மேலும் 15 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார்.