ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் உயரம் பாய்தலில் முதலிடம் பெற்ற தெல்லிப்பழை மகாஜன கல்லுாரி மாணவி..
இளையோருக்கான ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கான முதலாவது தகுதிகாண் போட்டியில் யாழ்.தெல்லிப்பழை மகாஜன கல்லுாரி மாணவி சிவபாதம் சுவர்ணா 16 வயது பெண்கள் பிரிவு கோலுான்றி பாய்தலில் முதலிடம் பெற்றார்.
இன்றைய தினம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த தகுதிகாண் போட்டியில் 2.70 மீற்றர் உயரம் தாண்டி 1ம் இடத்தை பெற்றுள்ளார்.
2ம் தகுதிகாண் போட்டியில் 2.80 மீற்றர் அடைவு மட்டத்தை இவர் பெற்றால் இளையோருக்கான ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இவர் பெறுவார்.