SuperTopAds

எந்த தடைகள் வந்தாலும் ஆர்ப்பாட்டம் நடந்தே தீரும்

ஆசிரியர் - Admin
எந்த தடைகள் வந்தாலும் ஆர்ப்பாட்டம் நடந்தே தீரும்

எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஹைட் பார்க்கில், நடத்தப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எவ்வித தடைகள் வந்தாலும், நடத்தப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், 

எமது ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக சுகாதாரப் பணிப்பாளர் ஊடாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதன் ஒருகட்டமாக சுகாதாரப் பணிப்பாளர் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். 
 
எனினும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு இடைவெளிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை தடை செய்ய மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை தடுக்க தமது சட்டத்தரணிகள் தயாராகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

ஹைட்பார்க்கில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த தடை ஏற்படுத்தப்பட்டால், முழுக் கொழும்பையும் ஹைட்பார்க் பூமியாக மாற்றப்போவதாகவும் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.