பிரதித் தலைவர் பதவியை நிராகரித்தார் சம்பந்தன்!
இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் 125க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரியவருகிறது.
கூட்டத்தின் போது இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அவர் அந்த பதவியை நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.