SuperTopAds

நிலையான எரிசக்தி வள அதிகாரசபை ஊடாக பூநகரிக்கு வருகைதரவுள்ள இந்தியர்கள்..! காரணம் என்ன?

ஆசிரியர் - Editor I
நிலையான எரிசக்தி வள அதிகாரசபை ஊடாக பூநகரிக்கு வருகைதரவுள்ள இந்தியர்கள்..! காரணம் என்ன?

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் நிலையான எரிசக்தி வள அதிகாரசபையின் ஊடாக இந்திய பிரஜைகள் இருவர் கள ஆய்வுக்காக வருகைதரவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

நவம்பர் மாதம் 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதி இடையில் இவர்கள் பூநகரிக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர்களுக்கு பயண அனுமதியை அதிகாரசபை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

பூநகரியில் எரிசக்தி திட்டங்கள் எதனையும் இந்தியா தொடங்கவுள்ளதா? அதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இவர்கள் வருகை தரவுள்ளார்களா? என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

இதேவேளை யாழ்ப்பாணத்தின் தீவக பகுதிகளில் மீள் புதுப்பிக்கதக்க எரிசக்தி திட்டங்களுக்கு சீனா முனைப்பு காட்டியிருக்கும் நிலையில் இந்தியாவும் அவ்வாறான முனைப்பு காட்டலாம் என கூறப்படுகிறது.