2021 பட்ஜெட்டில் என்ன உள்ளது? அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினை, சிகரெட் விலை அதிகரிப்பு, மதுபான வரி அதிகரிப்பு. இன்னும் பல..

* ஓய்வூதியத்தை பெறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பத்துவருடம் உறுப்பினராக பதவிவகிக்கவேண்டும்.
*அரசதுறையின் தொலைத்தொடர்பு செலவீனங்கள் 25 வீதத்தினால் குறைப்பு.
* அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 65வயதாக அதிகரிப்பு.
* அரச நிறுவனங்களிற்கான புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு இரண்டு வருடங்களிற்கு தடை.
* ஓய்வூதிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக அரசாங்க ஊழியர்களிற்கு புதிய சம்பள கட்டமைப்பு.
* அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைக் களைய புத்தாண்டு முதல் பாடுபடுவோம். ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாத அரச உத்தியோகத்தர்களுக்கு உரிய திகதியில் சம்பள உயர்வு வழங்கப்படும்.
* அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு 5 லீற்றரால் குறைக்கப்படும். தொலைபேசிக் கட்டணம் 20 சதவீதம் குறைக்கப்படும்.
* ஒரு தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசாங்க ஊழியர்கள் வேறு தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் பெறுவது கட்டுப்படுத்தப்படும்.
* நாடு முழுவதுமுள்ள 10,105 பாடசாலைகளுக்குத் தேவையான அதிவேக இணைய வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கொவிட் தொற்று காரணமாக நாடு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 700 மில்லியன் ரூபாவும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 1500 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
* சிறைச்சாலைகளில் தங்க வைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் உடல் நலனை பேணுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
* பொதுமக்கள் பாதுகாப்புக்கென பொலிஸ் திணைக்களத்துக்கு 500 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு.
*அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய தொகுதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு 05 மில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீடு.
* பெருந்தோட்ட மக்களுக்கு புதிய குடியிருப்புளை நிர்மாணிப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
* வீதி அபிவிருத்திக்கென 20 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு- நிதி அமைச்சர்.
* சிகரெட் விலை ஐந்துரூபாவால் அதிகரிப்பு.
* அரசியல்ரீதியில் பழிவாங்கப்பட்டவர்களிற்காக 100 மில்லியன் ஒதுக்கீடு.
* அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு முப்பதாயிரம் மில்லியன் ஒதுக்கீடு.
* மதுபானங்களுக்கு வரியை அதிகரிப்பதனால் 25 விகித வருமானத்தை பெற்றுக்கொள்ள தீர்மானம்
* காணாமல்போனவர்களது குடும்பங்களுக்கு 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.