SuperTopAds

நாட்டில் மீண்டும் பயண கட்டுப்பாடு அமுலாகுமா? மக்களின் எதிர்மறை நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கலாம், கைவிரிக்கிறார் சுகாதார அமைச்சர்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் மீண்டும் பயண கட்டுப்பாடு அமுலாகுமா? மக்களின் எதிர்மறை நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கலாம், கைவிரிக்கிறார் சுகாதார அமைச்சர்..

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் தலைதுாக்கும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறியுள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல, 

அரசாங்கம் மிக உயர்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது மக்கள் தங்களின் உயரிய பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்கள் வழங்குகின்ற பங்களிப்புக்கு அமைய கொவிட் தொற்று பரவல் கட்டுப்படுத்த்தப்படும் எனவும் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் விக்கிரமாரச்சி கண் மருத்துவ நிலையத்துடன் இணைந்த சீஹிஸ் விஷன் நிலையத்தை ( ZEISS VISION CENTER) திறந்து வைத்த பின்னர்

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கொவிட் கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும். 

மக்கள் அதற்கு எதிர்மறையாக நடந்துகொண்டால், மீண்டும் பயணக் கட்டுப்பாடு போன்றதொரு சூழலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், இதுவரை வெற்றிகரமாக தடுப்பூசிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப மக்கள் வாழும் சூழலை தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.