SuperTopAds

தடுப்பூசி அட்டை இல்லாதோருக்கு சிக்கல்..! பணிகள் துரிதகதியில், மிகவிரையில் நடைமுறைக்கு வரும் என்கிறார் சுகாதார அமைச்சர்..

ஆசிரியர் - Editor I
தடுப்பூசி அட்டை இல்லாதோருக்கு சிக்கல்..! பணிகள் துரிதகதியில், மிகவிரையில் நடைமுறைக்கு வரும் என்கிறார் சுகாதார அமைச்சர்..

தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெறாதவர்கள் பொது இடங்களில் நடமாடி முடியாதளவு கட்டுப்பாடு மிக விரைவில் அமுலுக்கு வரும். என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மீள வலியுறுத்தியுள்ளார். 

கண்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை நிலையத்தின் முதலாம் கட்டத்தை திறந்து வைக்கும் போது சுகாதார அமைச்சர் இதனை கூறினார்.

சட்டமா அதிபரிடமிருந்து கிடைத்துள்ள அனுமதிக்கு அமைய, பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சட்டங்களை இயற்ற முடியும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, COVID-19 ஒழிப்பிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை விதிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் 

என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.