SuperTopAds

பாடசாலை மாணவர்கள் கொத்தணி உருவாகும் அபாயம்..! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்கள் கொத்தணி உருவாகும் அபாயம்..! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை..

பாடசாலை மாணவர்கள் கொத்தணி உருவாகும் அபாயம் எழுந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்திருக்கின்றது. 

இது குறித்து சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.ரி.குலதிலக்க கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்றுக்குள்ளாகும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

இந்நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமாகும்போது நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அனுராதபுரம் மாவட்டத்தில் 60ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் 10 வரையான ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.