SuperTopAds

நாட்டில் 17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அபாய வலயங்களில் இருந்து வெளியேற மறுப்பவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவர்கள்!

ஆசிரியர் - Editor I
நாட்டில் 17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அபாய வலயங்களில் இருந்து வெளியேற மறுப்பவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவர்கள்!

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடர் அபாய வலயங்களில் இருந்து வெளியேற மறுப்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க கூறியுள்ளார். 

இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலையால் 17 மாவட்டங்களை சேர்ந்த 126 பிரதேச சபை பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.