மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்
மடிக்கும் திறன் கொண்ட சாதனங்களை உருவாக்குவதில் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் வகிக்கக்கூடிய ஆப்பிள் நிறுவனம் முணைப்பு காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் நிறுவனம் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் மடிக்கக்கூடிய பகுதி டிஸ்ப்ளேவாகவும், வெளிப்புறத்தில் பார்க்க புத்தம் போன்ற டிசைனில் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டிஸ்ப்ளே பகுதி மைக்ரோ-LED என்றும் அதனை உருவகப்படுத்த லிக்விட் மெட்டல் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் இந்த பொருள் 14-1 அடுக்குகளை உருவாக்கி, அது மெமரி அலாய் அல்லது மெட்டல் கிளாஸ் அதிகமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அதன் எதிர்கால ஐபோன்களில் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனத்திடம் இருந்து வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அந்நிறுவனத்தின் குறிப்பிட்ட டிஸ்ப்ளே பிரிவானது மடிக்கக்கூடிய OLED ஸ்கிரீன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகின்றது.
முன்னதாக சாம்சங் நிறுவனங்களில் டிஸ்ப்ளேகளை வாங்கி வந்த ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை சாம்சங் அம்பலப்படுத்துவதால் இம்முறை OLED டிஸ்ப்ளேகளை எல்ஜியிடம் இருந்து வாங்க இருப்பதாக கூறப்படுகின்றது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான Rigid Flexible Printed Circuit Boards (RFPCB) தயாரிப்பு பணிகளை முடிக்கிவிட எல்ஜி நிறுவனத்தின் தங்கை நிறுவனமான எல்ஜி இன்னோடெக் தனது குழுவினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து காப்புரிமை விண்ணப்பங்களில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை உருவாக்கி வரும் தகவல்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம், ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பல்வேறு இதர தயரிப்புகளிலும் அதனை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.