வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு கிராமங்கள்..! நோில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த மாவட்டச் செயலர்..
கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியில் கனமழையினால் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் இரு கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட இடத்தை மாவட்டச் செயலர் நோில் பார்வையிட்டுள்ளார்.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த வீதி ஊடான வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதிலாக அமைக்கப்பட்ட வீதிக்கு மேலாக குளத்து நீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு கிராமங்களை சேர்ந்த 90 குடும்பங்கள் வெளியேற பாதையில்லாமல் போயுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக,
மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியை பார்வையிட்டனர்.