சுவர் இடிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்த்தர் பரிதாபகரமாக மரணம்..!
ஓமந்தையில் உள்ள ஈய தொழிற்சாலை ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் குடம்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த தொழிற்சாலையின் இயந்திரப்பகுதிக்குள்
ஈயத்தினை உருக்குவதற்காக பயன்படுத்தப்படும் கல் சுவரை உடைத்தபோது அச் சுவர் பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர் ஒருவர் மீது இடிந்து விழுந்துள்ளது.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் மாத்தளை பகுதியை சேர்ந்த வேலு உதயராஜ் வயது 37
என்ற நபரே மரணமடைந்துள்ளார்.அவரது சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.