தாலிபான் ஆட்சியில் முதல்முறையாக காபூலில் நடத்தப்பட்ட கால்பந்து தொடர்!!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா இரத்து செய்த அதேநேரம், தாலிபான் ஆட்சிக்கு பின்னர் முதல்முறையாக காபூலில் கால்பந்து தொடர் நடத்தப்பட்டது.
மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தாலிபான் அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து நவம்பர் 27 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியுடன் நடக்க இருந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் இரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.
அதேநேரம் தாலிபான் ஆட்சிக்கு பின் காபூலில் வருடாந்திர கால்பந்து கிளப் தொடர் மீண்டும் நடத்தப்பட்ட நிலையில் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.