10 வருட காதல் முறிவா? -கவலையில் பிரியா பவானிசங்கரின்-
தமிழ் திரையுலகில் மேயாத மான் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் பிரியா பவானி சங்கரின் காதல் வாழ்க்கை முறிவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் தமிழில் கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம். எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண்விஜய்யுடன் மாபியா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது அவர் கைவசம் 8 படங்கள் உள்ளன. 2 படங்கள் வெளியாக தயாராக உள்ளது.
பிரியா பவானி சங்கர் 10 வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி வந்தார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் யாராவது என்னிடம் வாழ்க்கை முழுவதும் என்கூட இருப்பேன் என்று சொன்னால் எனது ரியாக்சன் இதுதான் என்று குறிப்பிட்டு பொய்சொல்கிறான் என்ற தொணியில் புன்முறுவலோடு கும்பிட்டு வழியனுப்புவதுபோல் ஒரு மீம்சையும் பகிர்ந்துள்ளார்.