SuperTopAds

விஜய் சேதுபதி ஏன் தாக்கப்பட்டார்? -கைதான கேரள இளைஞர் சென்ற கதை-

ஆசிரியர் - Editor II
விஜய் சேதுபதி ஏன் தாக்கப்பட்டார்? -கைதான கேரள இளைஞர் சென்ற கதை-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபரை கைது செய்த பொலிஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஜய் சேதுபதி நேற்று முன்தினம் வியாழக்கிழமை பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானத்தில் சென்றார்.

விமான நிலையத்தில் அவரும், உதவியாளரும் சென்றபோது, இளைஞர் ஒருவர் திடீரென அவரை தாக்க முயன்றார். உடனே விஜய் சேதுபதியின் பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அந்த வாலிபரை பாய்ந்து சென்று பிடித்தனர்.

பின்னர் அவர்கள் விஜய் சேதுபதியை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதன் பின் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற இளைஞரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

அவர் பொலிஸாரிடம் தகவல் தெரிவிக்கும் போது:- விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை கண்டதும் அவருடன் செல்பி எடுக்க விரும்பியதாகவும், தான் மது போதையில் இருந்ததால், அதற்கு உதவியாளர் மறுத்ததாகவும் கூறினார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் விஜய்சேதுபதியின் உதவியாளரை தாக்க முயன்றதாகவும் கூறினார். மேலும் அந்த இளைஞர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து பொலிஸார் வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.