வெடுக்குநாறி மலையில் பௌத்த சின்னங்களே காணப்பட்டது! அண்மைக்காலமாகவே இந்து கோவில் பூசைகள் நடக்கிறதாம்..
வெடுக்குநாறி மலையில் பௌத்த சின்னங்களே காணப்பட்டது. ஆனால் அண்மைக் காலமாகவே இந்து கோவில் என பூசைகள் நடப்பதாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அனுரமணதுங்க கூறியுள்ளார்.
நெடுங்கேணி வெடுக்குநாறி மலைதொடர்பான விடயம் நீதிமன்றத்தில் இருக்கின்றது அந்த பிரச்சினையில் நாம் ஏனைய பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயினும் ஒலிபெருக்கியினை பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தினை நாம் வழங்கியிருந்தோம் இதனால் அதிலும் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டிருப்பதை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அண்மைக்காலமாகவே இந்துக்கோவில் என்றவகையில் அங்கு பூசைகள் இடம்பெற்வருவதை எம்மால் அறியமுடிகின்றது இதற்கு முன்னர் பௌத்த விகாரைகளின் சிதைவுகள் அங்கு காணப்படுவதை
அவதானிக்க கூடியதாகயிருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.