அதி வேகமாக சார்ஜ் ஆகக்கூடிய மின்கலங்களை உருவாக்கியது சாம்சுங்
ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ள மின்கலங்கள் விரைவாக சார்ஜ் இறங்குவது ஒரு அனுகூலமாகவே இன்றுவரை இருந்து வருகின்றது.
அதேபோல குறித்த மின்கலங்களை மீண்டும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கின்றது.
இப் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய புதிய மின்கலத்தினை உருவாக்கி சாம்சுங் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
அதாவது தற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி மின்கலங்களை விடவும் 5 மடங்கு வேகமாக சார்ஜ் ஆகக்கூடிய கிரபீன் (Graphene) மின்கலத்தினையே சாம்சுங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மேலும் 45 சதவீதம் அதிகமாக சார்ஜ்சினை கொண்டிருக்கக்கூடியதாக காணப்படுகின்றமை இம் மின்கலத்தின் விசேட இயல்பாகும்.
எனினும் இம் மின்கலம் எப்போது பாவனைக்கு வருகின்றது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.