புதிய வரவு -செலவு திட்டத்தில் சிகரெட் விலை அதிகரிக்கப்படுமா..?
அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் சிகரெட் விலை அதிகரிக்கலாம் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்துக்கமைய ஒவ்வொரு வருடமும் சிகரெட் விலை அதிகரிப்பு ஏற்படுவதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிகரெட் விலையை தீர்மானிப்பதற்காக விஞ்ஞான பூர்வமான முறையில் விலை சூத்திரதை்தை முன்வைத்துள்ளோம். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட்டுக்கான விலையும் அதிகரிக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த விலை சூத்திரம் முன்வைக்கப்பட்ட நாள் முதல் நாட்டில் சிகரெட் இருக்கும் வரை ஒவ்வொரு வருடமும் அதன் விலை அதிகரிக்கும். நுகர்வோருக்கு கொள்வனவு செய்ய முடியாத அளவுக்கு சிகரெட் விலை அதிகரிக்க கூடும்
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.