இத்தீபத்திருநாளில் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக ஒருமித்து செயற்படுவோம்!

ஆசிரியர் - Admin
இத்தீபத்திருநாளில் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக ஒருமித்து செயற்படுவோம்!

மலையக மக்களின் மனங்களில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தும் முகமாக அனைவரும் ஒருமித்து செயற்படுவோம் என தீபாவளி வாழ்த்துச் செய்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

நரகாசுரன் எனும் தீமைகள் பல செய்த அசுரன் மக்களை துன்புறுத்திய காலப் பகுதியில், மக்கள் கிருஷ்ண பகவானிடம் தம்மைக் காப்பாற்றும்படி முறையிட்டதையடுத்து, கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதம் செய்தபோது, நரகாசுரன் கிருஷ்ண பகவானிடம் தான் இறக்கும் இந்நாளை மக்கள் அனைவரும் தீபங்கள் ஏற்றி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ வேண்டும் என வரம் கேட்டாராம். அவ்வாறு தீமை எனும் இருள் நீங்கி நன்மை எனும் ஒளி பெருக தீபங்கள் ஏற்றி வழிபடும் நன்நாளே தீபாவளி பண்டிகை என்பதே ஐதீகம். 

அவ்வாறே உலக வாழ் மக்கள் சகல பண்டிகைகளின் போதும்  விளக்கேற்றுவதன் மூலம் இருளை அகற்றி ஒளியை பரப்பி எதிர்பார்ப்பது, மக்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்பட வேண்டும் என்பதையே! எனவே, இந் நன்நாளில் இரத்தினபுரி மாவட்டம் உள்ளிட்ட மலையக மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பல இன்னல்களை சந்தித்த நம் மக்கள் தீபாவளி எனும் இந்நன்நாளில், தீபங்களை ஏற்றுவதன் மூலம், மக்களின் வாழ்வில் சாந்தி, சமாதானம், சௌபாக்கியம் ஒளிர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

மேலும், எமது மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக பேதங்களை மறந்து, மக்கள் நலனுக்காக அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு