SuperTopAds

அரசாங்க வீட்டுத்திட்டம் பெற்றுத் தருவதாக கூறி 6 லட்சம் பண மோசடி! 66 வயதான மோசடி பேர்வழி கைது..

ஆசிரியர் - Editor I
அரசாங்க வீட்டுத்திட்டம் பெற்றுத் தருவதாக கூறி 6 லட்சம் பண மோசடி! 66 வயதான மோசடி பேர்வழி கைது..

அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை கொழும்பு குற்றவியல் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 

இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர் கொழும்பில் இருவரிடம் அரசாங்க வீடுகளைப் பெற்றுத்தருவதாக கூறி, 6 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.