SuperTopAds

கொத்துரொட்டி வாங்க சென்ற இடத்தில் தகராறு..! ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மகனால் அடித்துக் கொல்லப்பட்ட 26 வயது இளைஞன்..

ஆசிரியர் - Editor I
கொத்துரொட்டி வாங்க சென்ற இடத்தில் தகராறு..! ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மகனால் அடித்துக் கொல்லப்பட்ட 26 வயது இளைஞன்..

கொத்துரொட்டி வாங்குவதற்காக ஹோட்டல் உரிமையாளரினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் காலி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

சம்பவத்தில் 26 வயது இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பத்தேகம, நாகொட பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு 

கொத்துரொட்டி வாங்குவதற்காக நேற்றிரவு 11.30 மணியளவில் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது குறித்த இளைஞருக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கோபத்தில் ஹோட்டலிலிருந்து வெளியேறிய இளைஞர், தனது வீட்டுக்குச் சென்று கூரிய ஆயுதமொன்றை எடுத்துவந்து ஹோட்டல் உரிமையாளரை தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த ஹோட்டல் உரிமையாளரும் 

அவரது மகனும் இணைந்து குறித்த இளைஞர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளார். அதேவேளை, இந்த மோதலில் படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர், 

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து ஹோட்டல் உரிமையாளரின் மகனைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.