GCE A/L மற்றும் O/L பரீட்சைகள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
GCE A/L மற்றும் O/L பரீட்சைகள், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டது..!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர, சாதாரண தர பரீட்சைகள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2021 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

அதேபோல் உயர்தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை வரையில் இடம்பெறவுள்ளது. 

சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி புதன் கிழமை வரையில் இடம்பெறவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு