SuperTopAds

ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று! கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவராம்..

ஆசிரியர் - Editor I
ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று! கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவராம்..

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து ஆசிரியர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் ஆரம்ப பிரிவு பாடசாலைகள் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் குறித்த ஆசிரியரும் பாடசாலைக்கு சென்று கற்பித்தலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.