இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடமாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து இந்திய துாதுவருடன் பேச்சு..!
வடமாகாண கடற்பகுதிகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக இந்திய துாதுவர் கோபால் பாக்லேயுடன் வடமாகாண மீனவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மீனவர்கள் சார்பான பிரதிநிதிகளான, வடமாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் N.V. சுப்பிரமணியம்,
உப தலைவர் J. பிரான்சிஸ், பொருளாளர் A. மரியராசா, தேசிய மீனவர் நல்லிணக்க வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாஸன், முல்லைத்தீவு அண்னை வேளாங்கண்ணி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் V.அருள்நாதன்
ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.