பாயில் சுற்றப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்த இளைஞனின் சடலம்! சந்தேகநபர் ஒருவர் கைது..
கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் பாயில் சுற்றப்பட்ட நிலையில் பாழடைந்த கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கடந்த 15/08/2021ம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் கருணாரட்ணம் ஜெசின்தன்
உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரத்தினபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதானவர் எனவும், உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கு இடையிலிருந்து முரண்பாட்டினால்
கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.