நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை..! அபாயம் இப்போதும் தீவிரமாக உள்ளது..
நாட்டில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும், நாட்டில் கொரோனா அபாயம் இன்னும் தீவிரமாகவே இருப்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா நாட்டு மக்களை எச்சரித்திருக்கின்றார்.
கொழும்பு - நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இன்று முன்னணி இராணுவத்தினருக்குப் பூஸ்டர் தடுப்பூசியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அன்றாடம் 500 முதல் 600 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் கொரோனாத் தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். மக்களின் வாழ்க்கையைக் கருத்தில்கொண்டு
மாகாணங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. எனவே, மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பெறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றார்.