முக கவசம் அணியாமல் விளையாடிய மாணவர்கள், கூடியிருந்து உணவருந்திய ஆசிரியர்கள்..! கடுமையாக எச்சரித்த சுகாதார பிரிவு..
பாடசாலையில் மாணவர்கள் முக கவசம் அணியாமல் நடமாடியதுடன், ஆசிரியர்கள் குழுவாக உட்கார்ந்திருந்து உணவருந்திய நிலையில் சுகாதார பிரிவினரால் கடுமையாக கண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் திஹகொட பகுதியில் உள்ள இரு பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இது குறித்து திஹகொட சுகாதார வைத்திய அதிகாரி கூறியுள்ளதாவது,
சுகாதார மருத்துவர அதிகாரி காரியாலயத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கடந்த வாரம் பாடசாலைகளின் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து பரிசோதனை செய்தனர். அங்கு இரு ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள்
சமூக இடைவெளி பேணாது குழுவாக ஒன்றுகூடி உணவருந்தியுள்ளனர். இதையடுத்து ஆசிரியர்கள் பொதுச் சுகாதார அதிகாரிகளால் கண்டிக்கப்பட்டனர். அப்பகுதியிலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்கள் முகக்கவசம் அணியாமல்
விளையாடுவதை தாம் கண்டதாகவும், மாணவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்க வேண்டாம் என ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.