இந்தியாவுக்கு திறமை உண்டு: ஆனால் வெற்றி பெறுவதற்கான மன வலிமை இல்லை!! -சாடும் கௌதம் கம்பீர்-
இந்திய அணி தற்போது உள்ள நிலையில் ஐ.சி.சி.யின் முக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொள்வதற்கான மன வலிமை இல்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
அதனால் தான் கடந்த 2 வருடங்களாக இந்தியா அணியினர் சர்வதேச போட்டிகளில் நாக் அவுட் ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று டுபாயில் நியூசிலாந்துக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் அரையிறுதிக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இந் நிலையிலேயே இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது கௌதம் கம்பீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.